ஜெர்மனியில் கனமழை: வெள்ளப்பெருக்கால் 1,300 பேர் வெளியேற்றம்
ஜெர்மனியில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
பெர்லின்,
ஜெர்மனியின் பவேரியா, பேடன் வுர்ட்டம்பேர்க் மாகாணங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்குள்ள 10 மாவட்டங்களுக்கு அவசர நிலை விடுக்கப்பட்டு உள்ளது.
எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதற்காக அங்கு பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story