ஜப்பானில் கனமழை காரணமாக ரெயில் சேவைகள் முடக்கம்
ஜப்பானில் கனமழை காரணமாக தற்காலிகமாக ரெயில் சேவைகள் முடங்கியது.
டோக்கியோ,
ஜப்பான் நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கியூஷு மற்றும் சுகோகு பகுதிகளில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல ரெயில் தடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது.
இந்தநிலையில் அங்குள்ள ஹிரோஷிமா மற்றும் ஹகாட்டா ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சன்யோ ஷிங்கன்செனில் புல்லட் ரெயில் செல்லும் வழித்தடம் உள்ளது. அங்கு வெள்ளம் சூழ்ந்ததையடுத்து தற்காலிகமாக ரெயில் சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதாக மேற்கு ஜப்பான் ரெயில்வே தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story