பாகிஸ்தானில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு 7 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை..!


பாகிஸ்தானில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு 7 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை..!
x

கோப்புப்படம் 

பாகிஸ்தானின் லாகூரில் சுமார் 7 மணிநேரம் பலத்த மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் சுமார் 7 மணிநேரம் கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த கனமழையால், அங்குள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நகரில் அதிகபட்சமாக 238 மிமீ மழை பெய்துள்ளது. இது பாகிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு 7 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை அளவாகும். மழையால், நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. சாலைகள் மழைநீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நகரின் பாதி பகுதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முன்னதாக, பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம், வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று அறிவித்தது. மேலும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் விழிப்புடன் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தியது.

வரும் நாட்களில் அதிக அளவில் மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


Next Story