"வேலை செய்யாவிட்டால் அரசு ஊழியர்கள் வீட்டிற்குச் செல்லலாம்"- இலங்கை அதிபர் அதிரடி
கூட்டம் ஒன்றில் பேசிய இலங்கை அதிபர், வேலை செய்ய முடியாவிட்டால் அரசு ஊழியர்கள் வீட்டிற்குச் செல்லலாம் எனக் காட்டமாக பேசியுள்ளார்.
கொழும்பு,
இலங்கையில் சரிவர பணியாற்றாத அரசு ஊழியர்கள், ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்குச் செல்லலாம் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறி உள்ளார்.
அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ரணில் விக்கிரமசிங்க, சரிவர வேலை பார்க்காமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் தர இயலாது என்றும், வேலை பார்க்காத அரசு ஊழியர்களுக்கு இலவசமாக உணவளிக்க முடியாது என்றும் கூறினார்.
தன்னாலும் இலவசமாக சாப்பிட முடியாது எனக் கூறிய ரணில், வேலை செய்ய முடியாவிட்டால் அரசு ஊழியர்கள் வீட்டிற்குச் செல்லலாம் எனக் காட்டமாக பேசினார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்துள்ளதாகவும், அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி, விவசாயப் புரட்சியைத் தொடங்குவோம் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.