சிறந்த பணியாளர் விருது வாங்கியவரை பணிநீக்கம் செய்த கூகுள்: திறமைக்கு இடம் இல்லையா.? பணியாளரின் உருக்கமான பதிவு


சிறந்த பணியாளர் விருது வாங்கியவரை பணிநீக்கம் செய்த கூகுள்: திறமைக்கு இடம் இல்லையா.? பணியாளரின் உருக்கமான பதிவு
x

சிறந்த பணியாளர் என்று விருது வாங்கிய ஐதராபாத்தைச் சேர்ந்த நபரை கூகுள் தற்போது பணியில் இருந்து நீக்கி உள்ளது.

வாஷிங்டன்,

உலகின் முன்னனி நிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக், டுவீட்டர் போன்ற நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களை குறிப்பிட்ட அளவுக்கு பணிநீக்கம் செய்தது.

இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.

இந்த நிலையில் சிறந்த பணியாளர் என்று விருது வாங்கிய ஐதராபாத்தைச் சேர்ந்த ஹர்ஷ் விஜய்வர்கியா என்பவரை பணியில் இருந்து தற்போது நீக்கி உள்ளது.

நான் ஏன் பணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்றும்,"திறமைக்கு இடம் இல்லையா...?"எனவும் அந்த நபர் சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.


Next Story