ஜெர்மனி: சம்பள உயர்வு கோரி ரெயில்வே ஊழியர்கள் 2 நாள் ஸ்டிரைக் அறிவிப்பு


ஜெர்மனி:  சம்பள உயர்வு கோரி ரெயில்வே ஊழியர்கள் 2 நாள் ஸ்டிரைக் அறிவிப்பு
x

ஜெர்மனியில் சம்பள உயர்வு கோரி ரெயில்வே ஊழியர்கள் 50 மணிநேரம் ஸ்டிரைக் அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

பெர்லின்,

ஜெர்மனி நாட்டில் ரெயில் மற்றும் போக்குவரத்து பணியாளர்களின் வர்த்தக யூனியன் அமைப்பு (இ.வி.ஜி.) தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், அடுத்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் 50 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு இந்த யூனியன் அழைப்பு விடுத்து உள்ளது. இதனால், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட கூடிய சூழல் உள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு யூனியன்களும் தங்களுக்கு கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும் என பல மாதங்களாக உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தின.

இதன் தொடர்ச்சியாக, பொது போக்குவரத்து துறை மற்றும் விமான நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் வேலை நிறுத்த போராட்டங்கள் நடைபெற்றன.

இதில் அர்த்தமுள்ள முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில், இந்த அறிவிப்பை யூனியன் வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஜெர்மனியில் சம்பள உயர்வு கோரி 50 மணிநேர வேலை நிறுத்த போராட்டம் வரும் ஞாயிற்று கிழமை இரவு 10 மணியளவில் தொடங்கி செவ்வாய் கிழமை முடியும் வரை தொடரும்.

நிலைமை எவ்வளவு தீவிரம் வாய்ந்தது என காட்டுவதற்காக நாங்கள், இந்த ஸ்டிரைக்கை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம் என்று அந்த யூனியனின் பேச்சுவார்த்தை நடத்துபவரான கோசிமா கூறியுள்ளார்.


Next Story