காபோனில் ஆட்சி கவிழ்ப்பு.. இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்கிறார்


காபோனில் ஆட்சி கவிழ்ப்பு.. இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்கிறார்
x

55 ஆண்டுகால அலி போங்கோவின் குடும்ப ஆட்சியின் தொடர்ச்சியாக ஜெனரல் நிகுமாவின் ஆட்சி இருக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காபோன் நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றார். இதன் மூலம் 3வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் இந்த தேர்தலில் அலி போங்கோ வெற்றி பெற்றது செல்லாது என்று போர்க்கொடி தூக்கிய ராணுவம் திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்டு கடந்த மாதம் 30ம் தேதி ஆட்சியை கவிழ்த்ததுடன், அதிகாரத்தை கைப்பற்றியது. அதிபர் அலி போங்கோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். இதன்மூலம் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆட்சியை கவிழ்த்த ராணுவக்குழுவின் தலைவரான ஜெனரல் பிரைஸ் நிகுமா, நாட்டின் இடைக்கால அதிபராக இன்று பதவியேற்கிறார். ஜெனரல் பிரைஸ் நிகுமாவுக்கு ஓரளவுக்கு மக்கள் ஆதரவும் உள்ளது. எனினும், 55 ஆண்டுகால அலி போங்கோவின் குடும்ப ஆட்சியின் தொடர்ச்சியாக ஜெனரல் நிகுமாவின் ஆட்சி இருக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story