பாகிஸ்தானில் ஜவுளி தொழிற்சாலையில் தீ விபத்து: மீட்புபணியின்போது 4 தீயணைப்பு வீரர்கள் பலி


பாகிஸ்தானில் ஜவுளி தொழிற்சாலையில் தீ விபத்து:  மீட்புபணியின்போது 4 தீயணைப்பு வீரர்கள் பலி
x

பாகிஸ்தானில் ஜவுளி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, மீட்புப்பணியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள ஜவுளி தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயந்துபோன தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதனிடையே தகவலின்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பல மணிநேரம் நடந்த இந்த போராட்டத்தில் தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு வெளியேறியது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மேலும் தொழிற்சாலை இடிந்து விழுந்து மீட்பு பணியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


Next Story