முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு 354 மில்லியன் டாலர் அபராதம் - நியூயார்க் கோர்ட்டு தீர்ப்பு


முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு 354 மில்லியன் டாலர் அபராதம் - நியூயார்க் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 Feb 2024 10:17 PM IST (Updated: 18 Feb 2024 1:54 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த 3 ஆண்டுகளுக்கு வணிகம் மேற்கொள்ள டிரம்ப்புக்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது வணிக நிறுவனம், மகன்கள், ஊழியர்களின் சொத்து மதிப்புகள் மற்றும் நிதி விவரங்கள் குறித்து தவறான தகவல் அளித்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் டிரம்புக்கு 354 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,947 கோடி) அபராதம் விதித்து நியூயார்க் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 ஆண்டுகளுக்கு வணிகம் மேற்கொள்ளவும் டிரம்ப்புக்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story