5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்


5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
x
தினத்தந்தி 23 April 2024 12:21 PM IST (Updated: 23 April 2024 12:34 PM IST)
t-max-icont-min-icon

நவாஸ் ஷெரீப்பின் சீன பயணமானது தனிப்பட்ட பயணம் என்று கூறப்படுகிறது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் (வயது 74), ஐந்து நாள் பயணமாக சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் பேரன் ஜுனைத் சப்தார் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தாரும் உடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பயணம் தனிப்பட்ட பயணம் என்றும், இந்த பயணத்தின்போது நவாஸ் ஷெரீப்பிற்க்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகள் மரியம் நவாஸ் முதல்-மந்திரியாக இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கூட்டங்களை நவாஸ் நடத்த உள்ளதாகவும், சீன நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்து பேச உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ காரணங்களுக்காக 2019ம் ஆண்டு லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடு திரும்பினார். அதன்பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக சீனா சென்றுள்ளார். கடந்த காலங்களில் மருத்துவ காரணங்களுக்காக நவாஸ் ஷெரீப் சீனா சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story