இலங்கையில் உணவு பொருட்களின் விலை விண்ணை தொடுகின்றன - நாடாளுமன்ற சபாநாயகர் வேதனை


இலங்கையில் உணவு பொருட்களின் விலை விண்ணை தொடுகின்றன - நாடாளுமன்ற சபாநாயகர் வேதனை
x

image courtesy: PTI

இலங்கையில் உணவு பொருட்களின் விலை விண்ணை தொடுகின்றன என்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா வேதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் உணவு பொருட்களின் விலை விண்ணை தொடுவதாகவும், உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "உணவுப்பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடுகின்றன. அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 400 ரூபாயை தாண்டும். வெறும் விலை கட்டுப்பாடுகள் வேலை செய்யாது மற்றும் செயல்படாது. அனைவருக்கும் அடிப்படை உணவு வினியோகத்தை உறுதி செய்ய தீவிர தலையீடு அவசியம்" என குறிப்பிட்டுள்ளார்.


Next Story