உணவு பாதுகாப்பின்மை, பருவகால நெருக்கடி சவால்கள் நம்முன் உள்ளன: ஐ.டு.யு.டு. கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பைடன் பேச்சு


உணவு பாதுகாப்பின்மை, பருவகால நெருக்கடி சவால்கள் நம்முன் உள்ளன:  ஐ.டு.யு.டு. கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பைடன் பேச்சு
x

இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் ஐ.டு.யு.டு. கூட்டத்தில் தலைவர்கள் பேசி வருகின்றனர்.



வாஷிங்டன்,



அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐ.டு.யு.டு. முதல் கூட்டத்தில், 6 துறைகளில் கூட்டு முதலீடு மற்றும் புதிய திட்ட தொடக்கங்கள் ஆகியவை பற்றி குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட உள்ளது. தனியார் பிரிவு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஐ.டு.யு.டு. கூட்டத்தில் நீர், ஆற்றல், போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய 6 துறைகள் பற்றி தலைவர்கள் பேசி வருகின்றனர்.

ஐ.டு.யு.டு. கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், நாம் இன்று சந்தித்து வரும் சவால்களில் அதிகரித்துள்ள பருவகால நெருக்கடி அல்லது வளர்ந்து வரும் உணவு பாதுகாப்பின்மை உள்ளிட்டவை நம்முன் உள்ளன. உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டுள்ள கொடூர மற்றும் நியாயப்படுத்த முடியாத தாக்குதலால் ஆற்றல் சந்தைகள் மோசமடைந்து உள்ளன.

தற்போது வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு, புதிய உட்கட்டமைப்பு திட்டங்களை கண்டறிவதற்காகவும், அவற்றில் முதலீடு செய்து, ஒன்றிணைந்து வளர்ச்சியடைய செய்வதற்காகவும் இந்த குழு பணியாற்ற இருக்கிறது. நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், சிறந்த பணிகளை நாம் செய்ய முடியும் என அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார்.


Next Story