ஜப்பானை தாக்க தொடங்கிய சுனாமி: பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பிரதமர் வேண்டுகோள்


ஜப்பானை தாக்க தொடங்கிய சுனாமி:  பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பிரதமர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Jan 2024 3:47 PM IST (Updated: 1 Jan 2024 3:49 PM IST)
t-max-icont-min-icon

ஜப்பானில் அடுத்தடுத்து பலமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சத்தில் அலறியடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹோன்ஷி அருகே 13 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்தது. ஜப்பானில் அடுத்தடுத்து பலமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சத்தில் அலறியடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைதொடர்ந்து சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது. கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடல்நீர் ஊருக்குள் வர தொடங்கி உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டதை தொடர்ந்து கடற்கரைக்கு அருகில் உள்ள ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் கடல் நீர் உள்ளே புகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என ஜப்பான் பிரதமர் கிஷிடா வலியுறுத்தி உள்ளார்.


Next Story