தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 22 பேர் பலி


தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 22 பேர் பலி
x

வெடிவிபத்தில் பலியானவர்களில் 20 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களில், 12 பேர் பெண்கள் மற்றும் 8 பேர் ஆண்கள் ஆவர்.

பாங்காக்,

தாய்லாந்து நாட்டின் முவாங் மாவட்டத்தில் தம்போன் சலகாவோ நகரில் சுபான் புரி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். நேற்று மாலை திடீரென ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து தொழிலாளர்களில் 10 பேரை காணவில்லை. பலியானவர்களில் 20 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களில், 12 பேர் பெண்கள் மற்றும் 8 பேர் ஆண்கள் ஆவர். வெடிவிபத்து நடந்ததில், 100 மீட்டர் தொலைவுக்கு பொருட்கள் பரவி கிடந்தன.

இந்த சம்பவத்தின்போது, ஆலையின் உரிமையாளர் இல்லை. அவர் வாடிக்கையாளர்களுக்கு பட்டாசுகளை வழங்குவதற்காக வெளியே சென்று விட்டடார்.

பண்ணை இல்லத்திற்கு வெளியே அமைந்த ஆலையில், வெடிபொருட்கள் மற்றும் பட்டாசு தயாரிப்புக்கான பொருட்கள் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டு இருந்தன. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள தாய்லாந்து பிரதமர் ஷ்ரெத்தா தவிசின், ஆலை விபத்து பற்றி ஆய்வு செய்து விரைந்து விசாரணை நடத்தும்படி தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.


Next Story