துபாய்: புர்ஜ் கலிபா அருகில் 35 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து


துபாய்: புர்ஜ் கலிபா அருகில் 35 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
x

துபாய் டவுன்டவுனில் உள்ள 35 மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

துபாய்,

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபா கட்டிடத்தின் அருகில் உள்ள 35 மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டவுன்டவுனில் உள்ள எமார் பவுல்வார்டு வாக் கட்டிடத்தில் அதிகாலை 2.20 மணியளவில் தீப்பற்றியது.

இதனையடுத்து, தீயானது வேகமாக கட்டிடத்தின் மேல்நோக்கி பரவத்தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை எழும்பியது. விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதிகாலை 4.00 மணியளவில் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.




Next Story