பிறப்பு விகிதம் கடும் வீழ்ச்சி; கட்டுப்படுத்தாவிட்டால் நாடு காணாமல் போகிவிடும்; ஜப்பான் உயர் அதிகாரி
ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை கட்டுப்படுத்தாவிட்டால் ஜப்பனே காணாமால் போய்விடும் என்றும் அந்த நாட்டு பிரதமரின் ஆலோசகர் மசாகோ மோரி தெரிவித்துள்ளார்.
டோக்கியோ,
ஜப்பானில் கடந்த 2022 இல் பிறந்தவர்களை விட இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கிறது, ஜப்பானில் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக புள்ளிவிவரம் வெளியானது. இந்த நிலையில்,ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை கட்டுப்படுத்தாவிட்டால் ஜப்பனே காணாமால் போய்விடும் என்றும் அந்த நாட்டு பிரதமரின் ஆலோசகர் மசாகோ மோரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் ,
நாடு பிறப்பு விகிதத்தில் ஆபத்தான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனை தடுக்காவிட்டால் ஜப்பான் என்ற நாடே மறைந்துவிடும்" என்று தெரிவித்துள்ளார். எனவே இதனை இதனை தடுப்பதற்கு அரசு வேண்டிய நடவடிக்கைகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். மக்கள் தொகையை மேம்படுத்த, குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு தேவையான உதவிகள் சலுகைகளை வழங்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story