இந்தியா - நியூசிலாந்து இடையேயான உறவில் புத்துணர்ச்சி தேவைப்படுகிறது - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்


இந்தியா - நியூசிலாந்து இடையேயான உறவில் புத்துணர்ச்சி தேவைப்படுகிறது - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
x

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மந்திரி ஜெய்சங்கர் புதிதாக கட்டப்பட்ட இந்திய உயர் ஆணையரக வளாகத்தை திறந்து வைத்தார்.

வெலிங்டன்,

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் வெலிங்டனில் புதிதாக கட்டப்பட்ட இந்திய உயர் ஆணையரகத்தை இன்று திறந்து வைத்தார். வெளியுறவுத் துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின் ஜெய்சங்கர் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்வது இதுவே முதல் முறையாகும்.

அப்போது அவர் பேசியதாவது, "ஒருவருக்கொருவர் பலத்துடன் விளையாடுவது, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான உறவை வளர்ப்பதற்கான மிகவும் விவேகமான வழியாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு "புதுப்பிக்க" தயாராக உள்ளது. புத்துணர்ச்சி பெறவும் உள்ளது.

இரு நாடுகளின் நமது பிரதமர்கள் நரேந்திரமோடி மற்றும் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆகியோரின் தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பு பார்வை, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான உறவை பலப்படுத்துகிறது. அதிக தொழில்கள் செய்வதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். எந்தவொரு உறவுக்கும் வணிகம் நல்லது.

வணிகம், டிஜிட்டல், விவசாயம், கல்வி, திறன்கள், பாரம்பரிய மருத்துவம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு துறைகளில் வாய்ப்புகள் நிறைய உள்ளன.விவசாய-வணிகத் துறையில் கூட்டாண்மைக்கு வரும்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நிறைய வாய்ப்புகள் உள்ளன.

வலுவான ஒத்துழைப்பு அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்யும். கிரிக்கெட்டில் உள்ள ஒத்துழைப்பு சிறந்த உதாரணமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story