'ரஷியா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு' - ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவிப்பு
ரஷியா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
பாரிஸ்,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 273-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.
போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், ரஷியா பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் இன்று அறிவித்துள்ளது. ரஷிய ராணுவம் உக்ரைனில் பொதுமக்கள், மருத்துவம்னாஇகள், பள்ளிகள், குடியிருப்புகள், மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், ரஷியா பயங்கரவாத ஆதரவு நாடு என்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.