ரஷியாவில் விமானத்தின் என்ஜினில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு
ரஷியாவில் விமானத்தின் என்ஜினில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புல்கோவா விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 என்ற அந்த விமானத்தில் பயணிகள் ஏறி தங்களது இருக்கையில் அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு தயாரானது.
இந்தநிலையில் தொழில்நுட்பகோளாறு காரணமாக விமானத்தின் என்ஜினில் இருந்து திடீரென புகை எழும்பியது. இதனால் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். இதனையடுத்து தொழில்நுட்ப குழுவினர் அங்கு வந்து அதனை சரி செய்தனர். பின்னர் 5 மணி நேரம் கழித்து அந்த விமானம் இயக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story