வடகொரிய அதிபர் தலைமையில் அவசர கூட்டம்


வடகொரிய அதிபர் தலைமையில் அவசர கூட்டம்
x

அதிபர் கிம் தலைமையில் நடந்த இதில் ஆளுங்கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

சியோல்,

ராணுவ பலம் மற்றும் உளவு திறனை மேம்படுத்தும் வகையில் நாட்டின் முதல் உளவு செயற்கை கோளை வடகொரியா தயாரித்தது. அறிவித்தப்படி கடந்த மாதம் இறுதியில் உளவு செயற்கை கோளை கொரிய தீபகற்ப புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மலிங்யோங்-1 என்னும் உளவு செயற்கை கோளை சுமந்தபடி சென்ற சோலிமா ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்து வெடித்து சிதறியது.

ராக்கெட் ஏவுதலில் ஏற்பட்ட தோல்வியை வடகொரியா ஒப்புக்கொண்டது. 2-ம் கட்ட உளவு செயற்கை கோளை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும் எனவும் அறிவித்தது. வடகொரிய அதிபரின் சகோதரியும், உள்துறை விவகார பிரதிநிதியுமான கிம் யோ ஜங் தனது உரையில் மறைமுகமாக இதுகுறித்து தெரிவித்தார்.

இந்தநிலையில் பியாங்காங்கில் உள்ள அரசு அலுவலகத்தில் அவசர கூட்டம் நடந்தது. அதிபர் கிம் தலைமையில் நடந்த இதில் ஆளுங்கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். உளவு செயற்கைகோள் தோல்வி மற்றும் அடுத்தகட்ட ஆயத்த பணிகள் குறித்து விவாதித்தனர்.


Next Story