விலங்குகளிடம் நடந்த பரிசோதனையில் விலங்குகள் நலன் மீறல் - எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மீது விசாரணை!


விலங்குகளிடம் நடந்த பரிசோதனையில் விலங்குகள் நலன் மீறல் - எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மீது விசாரணை!
x

விலங்குகளிடம் நடந்த பரிசோதனைகள் அவசரகதியில் நடத்தப்பட்டதாக நியூராலிங்க் ஊழியர்கள் புகார் அளித்தனர்.

வாஷிங்டன்,

எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்நிறுவனம் 2018 முதல் நடத்தி வரும் பரிசோதனைகளில் இதுவரை, 280க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், பன்றிகள் மற்றும் குரங்குகள் உட்பட சுமார் 1,500 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளிடம் நடந்த பரிசோதனைகள் விரைவுபடுத்தப்பட்டு அவசரகதியில் நடத்தப்பட்டதாக நியூராலிங்க் நிறுவன ஊழியர்கள் புகார் அளித்தனர். இதன் காரணமாக விலங்குகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு, உயிரிழப்புகளை சந்தித்தன, விலங்குகள் நலன் மீறப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமெரிக்க அரசு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


Next Story