பசிபிக் கடலில் உள்ள மெக்வாரி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் 5.4 ஆக பதிவு


பசிபிக் கடலில் உள்ள மெக்வாரி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் 5.4 ஆக பதிவு
x

மெக்வாரி தீவுப்பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹோபார்ட்,

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தின் ஒரு அங்கமான மெக்வாரி தீவுப்பகுதி, தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த தீவுப்பகுதியில் இன்று காலை 5.56 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story