ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் காலை 11:26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
காபுல்,
ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11:26 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கடியில் 255 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த 5ம் தேதி ஆப்கானிஸ்தானில் ரிக்டரில் 4.3 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது 125 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
EQ of M: 5.7, On: 29/08/2024 11:26:38 IST, Lat: 36.51 N, Long: 71.12 E, Depth: 255 Km, Location: Afghanistan. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/6PsXboMuXc
— National Center for Seismology (@NCS_Earthquake) August 29, 2024
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire