இஸ்ரேலில் அமெரிக்க தூதரகம் அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்: ஒருவர் பலி; 10 பேர் படுகாயம்
செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
ஜெருசலேம்,
இஸ்ரேல்-காசா போர் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். எனவே செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது அவர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதனால் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையில் கூட்டுப்படை உருவாக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே டிரோன் தாக்குதல் நடைபெற்றது. இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்று உள்ளனர்.
Related Tags :
Next Story