பிரேசில் நாட்டின் அமேசான் பகுதி ஏரியில் கரை ஒதுங்கிய டால்பின்கள்
பிரேசில் நாட்டின் அமேசான் பகுதி ஏரியில் டால்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன.
பிரேசிலியா,
காலநிலை மாற்றத்தால் பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இது உலக நாடுகளில் பல்வேறு பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய அமேசான் மழைக்காடுகளையும் இது விட்டுவைக்கவில்லை. அங்கு கடந்த சில நாட்களாக 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
இந்தநிலையில் அங்குள்ள டெபே ஏரியில் சுமார் 100 டால்பின்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இதுகுறித்த காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் பரவி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிக வெப்பநிலை காரணமாக இந்த மீன்கள் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இதற்கான காரணத்தை கண்டறிய கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சி குழுவினரை அரசாங்கம் அனுப்பி உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story