வங்காளதேச தலைநகர் டாக்காவில் அதிகரிக்கும் விவாகரத்துகள் - மாதந்தோறும் 600 வழக்குகள் பதிவு
விவாகரத்து வழக்குகளை பதிவு செய்வதில் ஆண்களை விட பெண்களே அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
டாக்கா,
வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்துகள் அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. அங்குள்ள 2 மாநகராட்சிகளில் மாதந்தோறும் சராசரியாக 600 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வடக்கு டாக்கா மாநகராட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு 3,442 திருமண முறிவு நடந்துள்ளன. 2021-ம் ஆண்டில் மேலும் கூடுதலாக 1000 விவாகரத்துகள் வழங்கப்பட்டுள்ளன. 2022-ல் இது 5,126 ஆக அதிகரித்து இருந்தது.
இதைப்போல தெற்கு மாநகராட்சியில் 2021-ல் 7,245 குடும்பங்கள் பிரிந்துள்ளன. 2022-ல் இது 7,698 ஆக அதிகரித்து இருந்தது. இந்த ஆண்டிலும் முதல் 3 மாதங்களில் மட்டும் 1,690 பேர் மனு செய்திருப்பது அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த விவாகரத்து வழக்குகளை பதிவு செய்வதில் ஆண்களை விட பெண்களே அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த விவாகரத்துகளின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.