போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை - இலங்கை அரசு அறிவிப்பு
போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கொழும்பு,
5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இன்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி, நச்சுப்பொருள், அபின், அபாயகர மசோதா சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. குறித்த மசோதாவில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார்
போதைப்பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இன்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.
Related Tags :
Next Story