டொமினிகன் குடியரசில் தொடர் கனமழை, வெள்ளம்; 21 பேர் பலி


டொமினிகன் குடியரசில் தொடர் கனமழை, வெள்ளம்; 21 பேர் பலி
x

வீடுகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், 13 ஆயிரம் பேர் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு சென்றனர்.

சான்டா டோமிங்கோ,

கரீபியன் தீவுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசு நாட்டில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், பல்வேறு இடங்களில் மின்சார இணைப்பு மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டது. மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

வெள்ள நீரால், பல பாலங்கள் மற்றும் சாலைகளின் ஒரு பகுதிகள் சேதமடைந்து உள்ளன. வீடுகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், 13 ஆயிரம் பேர் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு சென்றனர்.

சாலைகளில் இருந்த கார்களை வெள்ள நீர் அடித்து சென்றது. கட்டிடங்களின் தரை தளங்களை வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக செயல்பட்டு, இதுவரை 2,500 பேரை மீட்டுள்ளனர்.

2,600 பேரின் வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 21 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில், நெடுஞ்சாலையின் சுரங்க பகுதியில் இருந்த சுவர் திடீரென இடிந்து கார்கள் மீது விழுந்ததில், 9 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய பலரை மீட்கும் பணி நடந்து வருகிறது.


Next Story