திறமை, தொழில்நுட்பத்தின் ஒன்றிணைப்பு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் - பிரதமர் மோடி
திறமை, தொழில்நுட்பத்தின் ஒன்றிணைப்பு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி கூறினார்.
வாஷிங்டன்,
இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின் போது கையெழுத்தாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க பயணத்தின் போது வெள்ளைமாளிகையில் அமெரிக்க-இந்திய தொழிலதிபர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, திறமை, தொழில்நுட்பத்தின் ஒன்றிணைப்பு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும்' என்றார். நிகழ்ச்சியில் பேசிய ஜோ பைடன், நமது கூட்டணி நமது மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்குமானது' என்றார்.
Related Tags :
Next Story