இந்தியா-பிலிப்பைன்ஸ் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி: சீனா கடும் எதிர்ப்பு


இந்தியா-பிலிப்பைன்ஸ் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி: சீனா கடும் எதிர்ப்பு
x

கோப்புப்படம்

இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு 3-ம் தரப்பினரின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங்,

தென்சீன கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதே சமயம் அந்த கடல் பகுதி தங்களுடையது என வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.

இந்த சூழலில் சமீபத்தில் சர்ச்சைக்குரிய தென்சீன கடலில் பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சீனா தலைநகர் பீஜிங்கில் பத்திரிகையாளர்களிடம் பேசிய, ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வூ கியான் இதுப்பற்றி கூறுகையில், "இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு 3-ம் தரப்பினரின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது; பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதை சீனா தொடர்ந்து வலியுறுத்துகிறது. அதே போல் சீனாவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையிலான கடல்சார் தகராறு இருநாடுகளுக்கு இடையிலான பிரச்சினையாகும். இதில் தலையிட 3-ம் தரப்பினருக்கு உரிமை இல்லை. சீனா தனது தேசிய இறையாண்மை, பாதுகாப்பு கடல் உரிமைகள் மற்றும் நலன்களை உறுதியுடன் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

பிலிப்பைன்சுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பைப் பற்றி சீனா பதற்றமடைந்து வருகிறது, ஏனெனில் அதன் கடலோர காவல்படை கப்பல்கள் சமீபத்தில் பிலிப்பைன்ஸ் கடற்படைக் கப்பல்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளன, இது சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலின் சில பகுதிகளில் பெய்ஜிங்கின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துகிறது" என அவர் கூறினார்.


Next Story