ராணுவ பயிற்சி நடைபெறுவதால் சீனாவின் போஹாய் விரிகுடா பகுதியில் கப்பல்கள் செல்ல தடை
மஞ்சள் கடலின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள போஹாய் விரிகுடாவில் ராணுவ பயிற்சி நடத்த சீனா திட்டமிட்டுள்ளது.
பீஜிங்,
சீனா சமீப காலமாக தைவான் கடற்பகுதியில் போர்ப்பயிற்சிகளை நடத்தி அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது மஞ்சள் கடலின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள போஹாய் விரிகுடாவில் ராணுவ பயிற்சி நடத்த சீனா திட்டமிட்டுள்ளது.
அதன்படி சீனாவின் ஹெபெய் மாகாணம் டாங்ஷான் நகரில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட நேரடி ராணுவ பயிற்சிகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை இருக்கும் எனவும், இதனால் பயிற்சி நடைபெறும் பகுதிகளில் கப்பல்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story