இங்கிலாந்துக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் - ரிஷி சுனக்


இங்கிலாந்துக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் - ரிஷி சுனக்
x

Image Courtacy: AFP

இங்கிலாந்துக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று தலைநகர் லண்டனில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று ரிஷி சுனக் பேசியதாவது:-

சீனாவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான நாடுகளை சீனா குறிவைப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க உலகின் பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டணியை என்னால் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.

சீன இணைய அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் தொழில்நுட்ப பாதுகாப்பில் சிறந்த நடைமுறையைப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திர நாடுகளின் புதிய சர்வதேச கூட்டணியை நான் உருவாக்குவேன்.

சீனா இங்கிலாந்து தொழில்நுட்பத்தைத் திருடி வருகிறது. அதை தடுப்பதற்கு இங்கிலாந்தில் உள்ள அனைத்து சீன நிறுவனங்களையும் நான் மூடுவேன் என்று ரிஷி சுனக் பேசினார்.


Next Story