ஐ.நா.வில் இந்தியாவின் தீர்மானத்தை தடுத்து நிறுத்திய சீனா
லஷ்கர்-இ-தொய்பாவின் சஜித் மிரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்ககோரிய தீர்மானத்தை தடுத்து நிறுத்தியது சீனா.
வாஷிங்டன்,
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர்.
மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் போலீஸாரால் உயிரோடு பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார்.
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றமும் சம்மதம் தெரிவித்தது.
இந்தநிலையில், 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் மிரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற விடமால் சீனா தடுத்து நிறுத்தியது. லஷ்கர்-இ-தொய்பாவின் சஜித் மிரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்ககோரிய தீர்மானத்தை தடுத்து நிறுத்தியது சீனா.