ஆசிய நாடுகளின் ஆதரவை அபகாிக்க அமொிக்கா முயற்சி - சீனா குற்றசாட்டு


ஆசிய நாடுகளின் ஆதரவை அபகாிக்க அமொிக்கா முயற்சி - சீனா குற்றசாட்டு
x

Image Courtesy: AFP

சீனாவை எதிா்ப்பதற்காக ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமொிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.

பெய்ஜிங்,

சீனாவை எதிா்ப்பதற்காக ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமொிக்கா முயற்சிப்பதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்க் குற்றம் சாட்டி உள்ளாா்.

இது தொடா்பாக சீன பாதுகாப்பு அமைச்சா் வெய் ஃபெங்க் கூறுகையில்,

சீனாவை எதிா்ப்பதற்காக ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமொிக்கா முயற்சிப்பதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்க் குற்றம் சாட்டி உள்ளாா். அமொிக்கா பன்முகத்தன்மை என்ற போா்வையில் தனது நாட்டின் நலன்களை முன்னேற்ற முயல்கிறது. தைவான் சுதந்திரமாக தீவு எனவும் அங்கு சீனா தனது ராணுவ நடவடிக்கையை அதிகாித்தது தொடா்பாக அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் தொிவித்த குற்றச்சாட்டையும் மறுத்தாா்.

மேலும், எந்த நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகள் மீது திணிக்கக்கூடாது. பன்முகத்தன்மை என்ற போா்வையில் பிற நாடுகளை கொடுமைப்படுத்த கூடாது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிா்ப்பதற்காக, இந்தோ-பசிபிக் என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிக்கான உத்தியாகும். இது மற்றவர்களைக் கட்டுப்படுத்தவும் மோதலையும் உருவாக்குவதற்கான ஒரு உத்தியாகும்.

சீனா தனது ராணுவத்தை விரைவாக நவீனப்படுத்தி வருகிறது. சமீபத்தில் சீனா, சாலமன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இது பசிபிக் கடற்பகுதியில் சீன கடற்படை தளம் உருவாகலாம் என பலர் அஞ்சுகின்றனர்.

தென் சீனக் கடல் பகுதிகளில் அமொிக்க போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி எங்கள் பிராந்திய விவகாரங்களில் தலையிடுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளுடன் சீனாவிற்கு கடல்சாா்ந்த பிரச்சினை உள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் கடல் சாா்ந்த பிரச்சினைகளை தாங்களாகவே தீா்த்து கொள்ள வேண்டும். என்றாா்.

அமொிக்கா 'ஒரே சீனா' என்ற கொள்கையை பின்பற்றுகிறது. ஆனால் தைவானுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. அதே நேரத்தில் தைவானின் சுதந்திரத்தையும் ஆதரிக்கவில்லை இவ்வாறு அவா் பேசினாா்.

சீனா தைவானை தாக்கினால் அமெரிக்கா தைவானுக்கு இராணுவ உதவிகளை செய்யும் என அமொிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.


Next Story