பிரதமர் மோடியுடன் டெஸ்லா, டுவிட்டர் நிறுவனங்களின் அதிபர் எலான் மஸ்க் சந்திப்பு


பிரதமர் மோடியுடன் டெஸ்லா, டுவிட்டர் நிறுவனங்களின் அதிபர் எலான் மஸ்க் சந்திப்பு
x
தினத்தந்தி 21 Jun 2023 5:59 AM IST (Updated: 21 Jun 2023 6:06 AM IST)
t-max-icont-min-icon

நியூயார்க்கில் பிரதமர் மோடியை டெஸ்லா, டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க் சந்தித்தார்.

நியூயார்க்,

இந்திய பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்த பயணத்தில் நியூயார்க்கில் பிரதமர் மோடி பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து எலான் மஸ்க் கூறுகையில்,

"இந்தியாவின் எதிர்காலம் பற்றி நான் நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக உள்ளேன். பிரதமர் மோடி இந்தியாவில் கணிசமான முதலீடுகளைச் செய்ய எங்களைத் தூண்டுவதால், இந்தியா மீது உண்மையிலேயே மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நான் மோடியின் ரசிகன். இது ஒரு அருமையான சந்திப்பு. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்

அவர் (பிரதமர் மோடி) இந்தியாவிற்கு சரியான விஷயங்களைச் செய்ய விரும்புகிறார் என்று என்னால் கூற முடியும். அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார், புதிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார். மேலும் அது இந்தியாவின் சாதகமாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறார்.

அடுத்த ஆண்டு மீண்டும் இந்தியாவுக்குச் செல்ல நான் தற்காலிகமாகத் திட்டமிட்டுள்ளேன். ஸ்டார்லிங்கை இந்தியாவிற்கும் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். ஸ்டார்லிங்க் இணையம், தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story