அமெரிக்காவில் சட்டவிரோத மருந்துகளை பரிந்துரைத்த இந்திய டாக்டர் மீது வழக்கு


அமெரிக்காவில் சட்டவிரோத மருந்துகளை பரிந்துரைத்த இந்திய டாக்டர் மீது வழக்கு
x

சட்ட விரோதமாக பலருக்கு மருந்து பரிந்துரை செய்ததாக இந்திய டாக்டர் சோப்ரா மீது குற்றம்சாட்டப்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டாக்டராக பணியாற்றி வந்தவர் சவுதந்ரா சோப்ரா (வயது 76). இந்தியாவை சேர்ந்த இவர் அங்கு டாக்டராக பணியாற்றிய காலத்தில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் சில மருந்துகளை பலருக்கு பரிந்துரை செய்தார்.

இந்த மருந்துகள் நரம்பு மண்டலத்தை பாதிப்பதால் சில குறிப்பிட்ட மருத்துவ தேவைக்காக மட்டுமே அங்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இவற்றை சட்ட விரோதமாக பலருக்கு பரிந்துரை செய்ததாக சோப்ரா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவர் தனது டாக்டர் லைசென்சை திரும்ப ஒப்படைத்தார்.

இது தொடர்பான வழக்கு கலிபோர்னியா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை சோப்ரா ஒப்புக்கொண்டார். எனவே அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், சுமார் ரூ.8 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.


Next Story