கம்போடியா பிரதமர் திடீர் ராஜினாமா
ஆசியா நாடுகளிலேயே நீண்ட கால பிரதமராக பதவி வகித்து வந்த ஹூன் சென்(வயது 70) மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
புனோம் பென்.
தெற்கு ஆசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் ஆளும் கட்சியான கம்போடியா மக்கள் கட்சியும் தேர்தலில் கலந்து கொண்டது. தேர்தல் முடிவுகள் அதற்கு சாதகமான நிலையிலே வந்தது. 125 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 120 இடங்களை பிடித்து கம்போடியா மக்கள் கட்சி அபார வெற்றி பெற்றது. 96 சதவீத வாக்குகளை அந்த கட்சி பெற்றுள்ளது.
ஆசியா நாடுகளிலேயே நீண்ட கால பிரதமராக பதவி வகித்து வந்த ஹூன் சென்(வயது 70) மீண்டும் பிரதமராக பதவியேற்றார். இந்தநிலையில் பிரதமர் பதவியில் இருந்து சென் பதவி விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். 3 வாரங்களுக்குள் பொறுப்புகளை அனைத்தையும் தன் மூத்த மகனான ஹூன் மனேட்டிடம் ஒப்படைத்து விட்டு பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார். தற்போது பாதுகாப்புத்துறை இலாகாவை ஹூன் மனேட் கவனித்து வருகிறார்.
Related Tags :
Next Story