காலிங் பெல் அடித்து பிராங் விளையாட்டு... 3 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்


காலிங் பெல் அடித்து பிராங் விளையாட்டு... 3 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்
x

அமெரிக்காவில் 3 சிறுவர்கள் வீட்டின் காலிங் பெல்லை அடித்து, பிராங் விளையாட்டில் ஈடுபட்டது விபரீதத்தில் முடிந்தது.

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் அனுராக் சந்திரா (வயது 42). இந்திய அமெரிக்கரான இவரது வீட்டு வாசலில் உள்ள காலிங் பெல்லை அடித்து பிராங் விளையாட்டில் சில சிறுவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இது அவருக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. இதனை கேமிரா வைத்து அவர் கவனித்து வந்த நிலையில், சிறுவர்களின் தொல்லை அதிகரித்து உள்ளது என கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் சிறுவர்களில் ஒருவர், தனது இடுப்பின் பின்பகுதியை அவரது முகத்தில் தேய்த்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால், அவரது ஆத்திரம் பன்மடங்காக உயர்ந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, தனது காரை எடுத்து கொண்டு சிறுவர்களை அவர் விரட்டி சென்று உள்ளார். மணிக்கு 99 மைல் வேகத்தில் காரை ஓட்டி சென்ற சந்திரா, அவர்கள் 3 பேர் மீதும் மோதியுள்ளார்.

இந்த விபத்தில் 3 சிறுவர்கள் படுகாயமடைந்து உள்ளனர். இதில், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் டேனியல் ஹாக்கின்ஸ், திரேக் ரூயிஸ் மற்றும் ஜேக்கப் இவாஸ்கு என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் 16 வயதுடையவர்கள் ஆவர்.

இதற்கு முன்பும் இதேபோன்று காலிங் பெல் அடித்தபோது, அவர்களை சந்திரா துரத்தி விட்டிருக்கிறார். இந்த முறை சம்பவம் நடந்தபோது, 12 பீர்களை குடித்திருந்தேன் என விசாரணை அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார்.

இந்த காலிங் பெல் அடிக்கும் விளையாட்டை சிறுவர்கள் ஒரு சவாலாக செய்து உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு திமெஸ்கல் வேலி பகுதியில் இதேபோன்று அவர் காரை கொண்டு மோதி ஏற்படுத்திய ஒரு விபத்தில் அப்போது, 3 சிறுவர்கள் காயமடைந்தனர்.

சிறுவர்கள் படுகொலை சம்பவத்தில் சந்திராவை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர் மீது 3 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 3 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன.


Next Story