கொலம்பியாவில் பாதுகாப்பு துறை மந்திரியின் வருகைக்கு முன்னர் குண்டுவெடிப்பு - போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி


கொலம்பியாவில் பாதுகாப்பு துறை மந்திரியின் வருகைக்கு முன்னர் குண்டுவெடிப்பு - போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி
x

கொலம்பியாவில் பாதுகாப்பு துறை மந்திரியின் வருகைக்கு முன்னர் நடந்த குண்டுவெடிப்பில், போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலியாகினர்.

பகோட்டா,

அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் வடக்கு சான்டாண்டர் மாகாணத்தில் உள்ள திபு நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சென்ற ஜீப் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அந்த ஜீப் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர்.

இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலம்பியாவின் பாதுகாப்பு துறை மந்திரி இவான் வெலாஸ்குவெஸ் திபு நகருக்கு செல்வதற்கு சற்று முன்னர் இந்த தாக்குதல் நடந்திருப்பது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

நாட்டின் மிகப்பெரிய கிளர்ச்சி குழுவான புரட்சிகர ஆயுதப்படையின் அதிருப்தியாளர்களும், தேசிய விடுதலைப்படையினரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Next Story