வங்காளதேச தீயணைப்பு படையில் முதன் முறையாக பெண்கள் நியமனம்
தீயணைப்பு படையில் பெண்கள் நியமனம், பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என வங்காளதேச உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் கூறினார்.
டாக்கா,
உலகம் முழுவதிலும் ஆணுக்கு நிகராக பெண்கள் எல்லா துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். அந்தவகையில் அண்டை நாடான வங்காளதேச வரலாற்றிலும் தீயணைப்பு துறையில் பணிபுரிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி தலைநகர் டாக்கா அருகே உள்ள புர்பாச்சலில் 15 பெண்கள் தீயணைப்பு வீரர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு முன்னரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பெண்கள் பணிபுரிந்துள்ளனர். ஆனால் தீயணைப்பு வீரர்களாக பெண்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என அந்த நாட்டின் உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் கூறினார்.
Related Tags :
Next Story