ஷேக் ஹசீனா மீது மேலும் 4 கொலை வழக்குகள் பதிவு
வங்காள தேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
டாக்கா,
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
தற்போது வங்காளதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக உள்ளார். நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவிற்கு எதிராக பல்வேறு வழக்குகள் அங்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அவர் மீது வங்கதேச கலவரம் தொடா்பாக 42 கொலை வழக்குகள் உள்பட 51 வழக்குகள் வங்காள தேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஷேக் ஹசீனா மீது மேலும் 4 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, ஷேக் ஹசீனாவின் தூதரக பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது. இதனால், அவர் வங்காள தேசத்திற்கு நாடு கடத்தப்படும் சூழல் உருவெடுத்துள்ளது.
Related Tags :
Next Story