ஆஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு கத்தியை எடுத்து செல்ல அனுமதி


ஆஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு கத்தியை எடுத்து செல்ல அனுமதி
x

ஆஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு கத்தியை எடுத்து செல்ல ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பள்ளிக்கூடங்களுக்கு சீக்கிய மாணவர்கள் கிர்பான் எனும் கத்தியை கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. கிர்பானை எடுத்து செல்வது தங்களது மத அடையாளங்களில் ஒன்று எனவும், இந்த தடையானது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் கோரி அங்குள்ள சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் தீர்ப்பு வெளியானது. இதில், அரசின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு இந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டது அதேசமயம் மைதானத்தில் கிர்பானை எடுத்து செல்வதை தடை செய்யும் பள்ளிக்கூடத்தின் உரிமையை இது பாதிக்காது என கோர்ட்டு கூறியது. இந்த தீர்ப்பின் தாக்கங்களை பரிசீலிப்பதாக குயின்ஸ்லாந்து மாகாண கல்வித்துறை கூறி உள்ளது.


Next Story