நைஜீரியாவில் படகு கவிழ்ந்தது; விவசாயிகள் 64 பேர் பலியான சோகம்


நைஜீரியாவில் படகு கவிழ்ந்தது; விவசாயிகள் 64 பேர் பலியான சோகம்
x

நைஜீரியா நாட்டில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றி சென்ற மரப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாகோஸ்,

வடமேற்கு நைஜீரியாவில் ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்கிறார்கள். அந்த வகையில் 70 பேர் படகில் சென்ற போது திடீரெனெ ஆற்றில் கவிழ்ந்தது. இதில் விவசாயிகள் 64 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மீட்புக் குழு அதிகாரிகள் கூறுகையில், "70 விவசாயிகளை ஏற்றிச் சென்ற மரப் படகு விபத்தில் சிக்கியது. மீட்பு பணிகளுக்கு உள்ளூர் மக்கள் உதவினர். 3- மணி நேரமாக போராடி 6 பேரை தான் மீட்க முடிந்தது. 900-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை அணுகுவதற்கு தினமும் ஆற்றைக் கடந்துதான் செல்கிறார்கள். ஆனால் வெறும் இரண்டு படகுகள் மட்டுமே உள்ளதால், அதிக அளவில் ஆட்களை படகில் ஏற்றி செல்கிறார்கள். இது கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கிறது" என்றார்.


Next Story