பயங்கரவாதத்திற்கான நிதியுதவியை எதிர்த்து போராட ரிசர்வ் வங்கி - இந்தோனேசியா வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து


பயங்கரவாதத்திற்கான நிதியுதவியை எதிர்த்து போராட ரிசர்வ் வங்கி - இந்தோனேசியா வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
x

இந்தியாவும் இந்தோனேசியாவும் பணம் செலுத்தும் முறைகளில் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பாலி,

இந்தோனேசியாவின் பாலியில் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி கவர்னர்களின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது.

ஜி20 மாநாட்டையொட்டி பாலியில் இன்று இந்தியாவும் இந்தோனேசியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தியாவும் இந்தோனேசியாவும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்து, பணம் செலுத்தும் முறைகளில் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் இந்தோனேசியா வங்கி (பிஐ) இரு மத்திய வங்கிகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையெழுத்திட்டன என்று ரிசர்வ் வங்கி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா மற்றும் இந்தோனேசியா வங்கியின் துணை கவர்னர் டோடி புடி வாலுயோ ஆகியோர் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் இந்தோனேசியா வங்கி கவர்னர் பெர்ரி வார்ஜியோ ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதற்கும், திறமையான கட்டண முறைகளை உருவாக்குவதற்கும் மற்றும் எல்லை தாண்டிய கட்டண இணைப்பை அடைவதற்கும் நல்ல அடிப்படையை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story