பாலஸ்தீன் பிரச்சினை தொடர்பாக அல்ஜீரியாவில் அரபு உச்சிமாநாடு


பாலஸ்தீன் பிரச்சினை தொடர்பாக அல்ஜீரியாவில் அரபு உச்சிமாநாடு
x

அரபு லீக் உச்சிமாநாட்டில் பாலஸ்தீன் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

அல்ஜீரியஸ்,

31-வது அரபு லீக் உச்சிமாநாடு அண்மையில் அல்ஜீரியா நாட்டின் தலைநகரான அல்ஜீரியசில் நடைபெற்றது. இதில் பிரதேச உணவு பாதுகாப்பு, பாலஸ்தீன் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இதன் துவக்க விழாவில் பேசிய அல்ஜீரிய அரசு தலைவர் அப்துல் மஜீத், சிக்கலான பிரதேச மற்றும் சர்வதேச சூழ்நிலைகளுக்கு இடையில் இந்த மாநாடு நடத்தப்படுவதாக தெரிவித்தார். குறிப்பாக அரபு உலகில் பதற்றம் மற்றும் நெருக்கடிகள் அதிகமாகி வரும் நிலையில் இந்த மாநாடு நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதேச உணவு பாதுகாப்பை பேணிக்காக்கும் வகையில் அரபு நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் பாலஸ்தீன் பிரச்சினையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்த அவர், பாலஸ்தீன மக்கள் கிழக்கு ஜெருசலேம் தலைநகரமாக கொண்ட தங்கள் சுதந்திர அரசை நிறுவுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அரபு நாடுகள் மேற்கொண்ட அமைதி முயற்சியை புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Next Story