செர்னோபில் பேரழிவு போல் மீண்டும் ஒரு அசம்பாவிதமா? ஆபத்தின் விளிம்பில் அணுமின் நிலையம்


செர்னோபில் பேரழிவு போல் மீண்டும் ஒரு அசம்பாவிதமா? ஆபத்தின் விளிம்பில் அணுமின் நிலையம்
x

கோப்புப்படம் 

உக்ரைன் - ரஷியா இடையிலான தாக்குதலால் உக்ரைனின் ஜப்போரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு வெளியேறும் அபாயம் உள்ளது.

கீவ்,

உக்ரைனின் ஜப்போரிஜியா அணுமின் நிலையத்தில் இருந்து ஒருவேளை கதிர்வீச்சு வெளிப்பட்டால் அதில் இருந்து தப்பிக்க தேவையான பயிற்சிகள் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜப்போரிஜியா அணுமின் நிலையத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் எந்நேரமும் அங்கு ஆபத்து நிகழலாம் என்ற பதற்றம் நிலவி வரும் நிலையில், செர்னோபில் பேரழிவைப் போல் மீண்டும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஜப்போரிஜியா அணுமின் நிலையத்தில் இன்று ஐநா ஆய்வாளர்கள் பார்வையிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.


Next Story