ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி சிறையில் உயிரிழப்பு
அலெக்ஸ் நவால்னி உயிரிழப்புக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
மாஸ்கோ,
ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னி உயிரிழந்துள்ளார். புதினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிறையில் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அலெக்ஸ் நவால்னி உயிரிழப்புக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
Related Tags :
Next Story