ஸ்பெயினில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய தக்காளி திருவிழா...


ஸ்பெயினில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய தக்காளி திருவிழா...
x

ஸ்பெயின் நாட்டில் தக்காளி திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ஸ்பெயின்,

ஸ்பெயின் நாட்டில் உள்ள வாலென்சியா நகரில் தக்காளி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, சுமார் 20,000 க்கும் அதிகமான மக்கள், இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர். இதில் 130 டன் எடை கொண்ட தக்காளி பழங்கள் டிரக்குகளில் வரவழைக்கப்பட்டன.

பின்னர் பொதுமக்கள், உற்சாகத்துடன் தக்காளி பழங்களை வீசியடித்து கொண்டாடினர். இதனால் அப்பகுதி முழுவதும் தக்காளி சாறு ஆறாக ஓடியது.


Next Story