'வழக்கமான நடைமுறைதான்' - புதிய வரைபடம் தொடர்பாக சீனா விளக்கம்


வழக்கமான நடைமுறைதான் - புதிய வரைபடம் தொடர்பாக சீனா விளக்கம்
x

அக்சாய் சின் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டிருந்தது.

பீஜிங்,

இந்தியாவின் அருணாசல பிரதேசம், சர்ச்சைக்குரிய அக்சாய் சின் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த வரைபடத்தை நிராகரித்த இந்தியா, இது தொடர்பாக அந்த நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவின் கண்டனம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், 'சீனாவின் தேசிய வளத்துறை அமைச்சகம் 2023-ம் ஆண்டுக்கான புதிய வரைபடத்தை வெளியிட்டது. சீன இறையாண்மையை சட்டப்படி செயல்படுத்துவதில் இது ஒரு வழக்கமான நடைமுறைதான். இந்த விவகாரத்தில் தொடர்புடைய தரப்பினர் (இந்தியா) அமைதியாக இருப்பார்கள் என்றும் மிகைப்படுத்துவதை தவிர்ப்பார்கள் என்றும் நம்புகிறோம்' என்று தெரிவித்தார்.


Next Story