இசை நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்த ரேடியோ சேனலை இழுத்து மூடிய தலீபான்கள்!
ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் மாதத்தில் இசை நிகழ்ச்சி ஒலிபரப்பியதாக கூறி ரேடிய சேனலை மூட தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலீபான்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்ததில் இருந்தே பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக மேற்கத்திய நாடுகளும் ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தும் தலீபான்களை விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்களால் நடத்தப்பட்டு வந்த ரேடியோ சேனல் ஒன்றை தலீபான்கள் மூட உத்தரவிட்டுள்ளனர். ரம்ஜான் மாதத்தில் இசை நிகழ்ச்சியை ஒலிபரப்பி இஸ்லாமிய எமிரேட்ஸ் சட்டங்களை மீறி விட்டதாக கூறி தலீபான்கள் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ரேடியோ சேனலில் பணியாற்றும் 8 ஊழியர்களில் 6 பேர் பெண்கள் ஆவர். பெண்களால் நடத்தப்பட்டு வந்த ஒரே ரேடியோ சேனலும் இதுவே ஆகும்.
Related Tags :
Next Story